தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்செந்தூர் முருகன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக கடும் விரதம் இருந்து 3 ஆம் ஆண்டாக பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றார்.
முன்னதாக அதிகாலையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் முன்பு அமைந்துள்ள சௌபாக்கிய விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலகு குத்தப்பட்டு பறவை காவடி எடுத்து சென்றார். செல்லும் பாதையில் வழி நெடுக பக்தர்கள் நின்று 'வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா' என்ற பக்தி கோஷத்துடன் வரவேற்றும் காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.