தென்காசி அருகே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

55பார்த்தது
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் பாவூர்சத்திரம் செல்லும் வழியில் ஊசி, காலாவதியான மருந்துகள், மாத்திரைகளை சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் நடமாடும் பகுதி என்பதால் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் கால்நடைகள் சுற்றி திரிவதால் மருத்துவக் கழிவுகளை சாப்பிட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி