ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கல்லூரியில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான செஸ் போட்டியில் எஸ். பி. சுரேஷ்குமார் பரிசு வழங்கினார்.
ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கல்லூரியில், ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில், 3வது மாநில அளவிலான குழந்தைகளுக்கு செஸ் போட்டி நேற்று
நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலடி அருணா அறக்கட்டளையின் கல்வி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்தார். அம்பை அரசு கல்லூரி; முதல்வர் சௌந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார்.
தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் டி. பி. சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தை களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர திமுக செயலாளர் பாப்புலர்செல்லத்துரை, மாநில விவசாய அணி இணை செயலாளர் செல்லப்பா, கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்அறிவழகன், கடையம் சேர்மசெல்வன், பஞ்சு அருணாசலம், ஜெபராஜன் மற்றும் கல்லூரி பேராசிரியர் கள், பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.