ஆலங்குளம் மூதேவி ஸ்ரீதேவி கோவில் சிறப்பு பூஜை

19பார்த்தது
ஆலங்குளம் மூதேவி ஸ்ரீதேவி கோவில் சிறப்பு பூஜை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பூதேவி ஸ்ரீதேவி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து "கீதை காட்டும் பாதை" மற்றும் "நற்சிந்தனை" நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பிஸ்வாஸ் மற்றும் புலவர் சிவஞானம் ஆகியோர் "சூடி தந்த சுடர்கொடி" தலைப்பில் உரையாற்றினர். பகவத்கீதை உபதேசங்களும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.