வெங்காடம்பட்டியில் ரூ. 22. 60 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

64பார்த்தது
வெங்காடம்பட்டியில் ரூ. 22. 60 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்
தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி ஊராட்சியில் ரூ. 22.60 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. வெங்காடம்பட்டி ஊராட்சி நெல்லையப்புரத்தில் ரூ. 12 லட்சத்திலும்,கோவிலூற்றில் ரூ. 5. 60 லட்சத்திலும், கோவிலூர்றில் ரூ. 5.60 லட்சத்திலும், மயிலப்புரத்தில் ரூ. 5 லட்சத்திலும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடக்க விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார். 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலர் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் பேரூர் திமுக செயலர் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லி செல்வன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி