தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை காலனி தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் பேச்சிமுத்து (33). கடந்த திங்கள்கிழமை தனது பைக்கில் மாறாந்தையில் இருந்து ஆலங்குளத்துக்கு வந்தார்.
சிவலார்குளம் விலக்குப் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பேச்சிமுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.