தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். சாம்பவர்வடகரை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பானுமதி (64). இவரது வீட்டில் சலவை இயந்திரம் பழுதாகியுள்ளது.
இதை, அதே ஊரைச் சேர்ந்த சட்டத்துரை(48) என்பவரை பழுதுநீக்க சொல்லிவிட்டு பானுமதி பக்கத்து வீட்டுக்குப் பீடிசுற்ற சென்றுள்ளார். பழுதுநீக்கிவிட்டு சட்டத்துரை சென்ற பிறகு வீட்டில் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின் பேரில், சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில், சட்டத்துரை நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 22 கிராம் தங்க நகையை மீட்டனர்.