தென்காசி மாவட்டம் ஊத்துமலை மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள அனுமந்தபுரியில் ராம பக்தி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அனுமனுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 32 வகையான பல்வேறு திரவியங்கள் கொண்டு பூஜைகள் நோம்பிக்கைகள் நடைபெறுகின்றன. அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.