விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

81பார்த்தது
விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே சடையப்பபுரம் மேலத் தெருவை சோ்ந்த விவசாயி சண்முகவேல் (60). கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தனது வயலுக்குச் சென்ற சண்முகவேலை விஷப் பூச்சி கடித்துள்ளது.

இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்த அவரை, அப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சண்முகவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி