ஆலங்குளம்: மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

68பார்த்தது
ஆலங்குளம்: மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் சுப்பிரமணியன் (40). விவசாயியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர் உறவினரின் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் ஏறி காய்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தார். 

காயமடைந்த அவரை மீட்டு ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஊத்துமலை போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி