மோட்டார் சைக்கிள்ல இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

71பார்த்தது
மோட்டார் சைக்கிள்ல இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துவேல் ராஜா (39). விவசாயியான இவர் நேற்று வீட்டிலிருந்து கடைக்கு காமராஜர் சிலை அருகில் செல்லும் போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீழப்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி