சுரண்டை நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருட்டு

60பார்த்தது
சுரண்டை நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடை க்கு சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் குழந்தையுடன் வந்தாராம். அவா் தங்கச் சங்கிலி எடுக்க வேண்டும் எனக் கேட்டதால், பல வடிவங்களிலான தங்கச் சங்கிலிகளை கடை உரிமையாளா் எடுத்துக்கொடுத்தாராம். அவற்றைப் பாா்ப்பதுபோல நடித்த அந்தப் பெண், குடிக்க தண்ணீா் கேட்டாராம். கடை உரிமையாளா் தண்ணீா் எடுத்துவருவதற்குள், 12 கிராம் தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, தனக்கு எந்த மாடல் நகையும் பிடிக்கவில்லை எனக்கூறிவிட்டு சென்றாராம்.

பின்னா், நகைகளை சரிபாா்த்ததில் ஒரு சங்கிலி குறைந்திருந்ததாம். கடையில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த பெண் தங்கச் சங்கிலியை தனது கைப்பையில் போடுவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி