எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

2555பார்த்தது
எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை வீரமாமுனிவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஜித் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் குத்துக்கல்வலசையில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததால் அஜித் சோகமாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார். நேற்று மதியம் அருகில் இருந்த மற்றவர்கள் வீடு பூட்டி இருந்ததை சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அஜித் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அஜித் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொ லைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி