மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் மூதாட்டி

82பார்த்தது
தென்காசி மாவட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்டம் திருவேங்கடம், ஜமீன் அழகாபுரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி மனு அளிக்க வந்த நிலையில் திடீரென்று அரசு அதிகாரிகள் முன்பு குருணை மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இதை கண்ட அதிகாரிகள் அதிர்ந்த நிலையில் காவல்துறையின் உதவியோடு மூதாட்டி தடுத்து நிறுத்தினார்.

விசாரணையில் மூதாட்டிக்கு கணவர் இல்லாத நிலையில் ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளதாகவும் திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள் தன் சொத்துக்களை வாங்கிக் கொண்டு தன்னை கவனிக்காமல் விட்டதாகவும் இதனால் உணவுக்கு கூட வழியில்லாமல் சுற்றித் திரிவதாகவும் எனவே அரசு அதிகாரிகள் தலையிட்டு தன் பிள்ளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து மூதாட்டியை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி