தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை சிவகுருநாதபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டன.
சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சு. பழனிநாடார் எம்எல்ஏ, மாணவர்களுக்கான இருக்கைகளை வழங்கினார். இதில், நகரமன்றத் தலைவர் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவர் த. ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் பால், கோபால், செல்வம், காமராஜ், ரத்தினசாமி, சோமச்செல்வம், பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.