தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை பேரில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துச்செல்வி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் 50 சேலைகள் பெண்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகி பரமேஸ்வரி, கலா, சீதா, முருகேஸ்வரி, சாரதா, மீனாட்சி, முத்துலட்சுமி உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.