ஆலப்பட்டி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

65பார்த்தது
ஆலப்பட்டி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிபட்டி
வைத்திலிங்க சுவாமி கோயிலில் ஆவணி
திருவிழா ஆண்டுக்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

இதில் கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.

இதில்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :