கடையம் அருகே மின்கம்பத்தில் ஆட்டோ மோதி ஓட்டுநர் பலி

65பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் ராஜீவ் காலனியை சேர்ந்தவர் சைலப்பன் (28). ஆட்டோ ஓட்டுநரனா இவர் இன்று காலை புலவனூருக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் ஆட்டோவை பலமாக மோதியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே சைலப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கண்டு அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கடையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி