தென்காசியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

84பார்த்தது
தென்காசியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலமாக மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் படி பொதுமக்களின் குறையை தீர்ப்பதற்காக சட்ட விழிப்புணர்வு மொபைல் வேன் வாகனம் மூலமாக சட்டவிழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு அதன் மூலம் சட்ட விழிப்புணர் ஏற்படுவதற்காக இன்று புதிய நீதிமன்ற வளாக கட்டிடத்தில் விழா நடைபெற்றது,

இவ்விழாவில் பொது மக்களுக்காக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மற்றும் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு ராஜவேல் ஐயா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்,

மேலும் இவ்விழாவில் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு ராஜவேல் அவர்கள் மற்றும் தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மாண்புமிகுமனோஜ் குமார் அவர்கள் மற்றும் தென்காசிதலைமை குற்றவியல் நீதிபதி மாண்புமிகு கதிரவன் அவர்கள் மற்றும் முதன்மை சார்பு நீதிபதியும் தென்காசி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான மாண்புமிகு கிறிஸ்டல் பபிதா அவர்கள் மற்றும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி மாண்புமிகு மாரீஸ்வரி அவர்கள் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மாண்புமிகுராஜேஷ் குமார் அவர்கள் மற்றும் நீதித்துறை நடுவர் மாண்புமிகு பொன் பாண்டி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி