தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்

69பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்
அ. தி. மு. க. வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலா வருகிற 17-ந்தேதி தனது சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக 16-ந் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலா, மறுநாள் 17-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி