அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் நியமனம் செய்து கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கு பாடம் சார்ந்த தகுதிவாய்ந்த முதுகலை பட்டத்துடன் பி.எட். தேர்ச்சி பெற்றவர்களையும் நியமிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.