தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை காலை ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, கோயிலை சுற்றி வந்த இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த இளைஞரான விஷ்ணுவர்தனை (31) பக்தர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.