மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் ரசிகர்களால் கோயில் கட்டப்பட்டது. ரஜினியின் 74வது பிறந்தநாள் நாளை (டிச. 12) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 3 1/2 அடி உயரம் மற்றும் 300 கிலோ எடையில் ரஜினி கோயிலில் முழு கருங்கல்லால் ஆன புதிய சிலையை அமைத்து பூஜைகள் செய்து தீவிர ரஜினி ரசிகர் வழிபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.