கோவில் காளை இறப்பு: கிராம மக்கள் அஞ்சலி

77பார்த்தது
கோவில் காளை இறப்பு: கிராம மக்கள் அஞ்சலி
திண்டுக்கல்: நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு, மந்தையம்மன் கோவில் காளை கோவில் கிணற்றில் விழுந்து இறந்து விட்டது. தொடர்ந்து கோவில் காளை அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டது. அதற்கு மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த காளையானது பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றுள்ளது. காளை கோவிலின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி