தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழை குறைந்து வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால், ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என கூறப்பட்டுள்ளது.