அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த மே 4-ந்தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இன்று (மே. 11) மாநிலத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ஈரோடு - 104.36, கரூர் பரமத்தி - 104.36, மதுரை விமான நிலையம் - 104, மதுரை நகரம் - 103.64, பாளையங்கோட்டை - 103.1, திருச்சி - 103.1, வேலூர் - 102.38, திருத்தணி - 101.66.