மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் கைது!

103938பார்த்தது
மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் கைது!
அமெரிக்காவில் மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கென்ட்டக்கி மாகாணத்தில் உள்ள உட்லான் பள்ளியில் பணிபுரியும் 38 வயதான எல்லன் ஷெல் என்ற ஆசிரியை அடிக்கடி மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில். மாணவர்களை பலாத்காரம் செய்ததாக அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவின் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பல ஆசிரியைகள் வரிசையாக கைது செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது வரை 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.