மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த நிலையில் அது தொடர்பாக முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஓய்வூதியத் திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் முயற்சியாக, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிகள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான நிலையை உறுதி செய்யும்.