டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் நேற்று (ஜூன்.03) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் காரில் 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. RWD 75kWh பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிமீ வரை பயணிக்க முடியும். 10.7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த காரின் முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.21.49 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம் விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.