டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் காரை கடந்த மாதம் மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த கார், ரூ. 6.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலை என நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியிருந்தாலும், இந்த கார் இப்போது நாட்டில் உள்ள டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.