புதுச்சேரியில் சாலையில் சென்ற டாடா ஏஸ் வாகனம் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான சிசிடிவியில், பெண் ஒருவர் கடை வாசலில் நின்றிருந்தபோது அங்கு வேகமாக வந்த வாகனம், அவரை இடிப்பதுபோன்று வந்து கடைக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விசாரணையில், வாகனத்தை மது போதையில் கிளீனர் ஓட்டியது தெரியவந்துள்ளது.