குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நாடியாட் பகுதியில் உள்ள பரோடா விரைவு சாலையில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்து மீது டேங்கர் மோதியது. இதனால், பேருந்து சாலையோர தண்டவாளத்தில் மோதி 25 அடி ஆழத்தில் விழுந்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அகமதாபாத்தில் இருந்து புனே நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.