வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு இன்று (மார்ச். 24) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு அவருக்கு அவசர இதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இக்பால் இதயத்தில் அடைப்பை உறுதி செய்த மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை சீராக நடைபெறுவதாகவும் அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.