பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு பாடம் கற்பிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.