கடலூர்: சேடப்பாளையத்தைச் சேர்ந்த சிறப்பு படை காவலர் சம்பத் (28) என்பவருக்கும் 28 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பத் அந்த இளம்பெண்ணை விடுதியில் 4 நாட்கள் தங்க வைத்து ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பின், இளம்பெண் தன்னை திருமணம் செய்ய கூறியபோது, சம்பத் மறுத்துள்ளார். மேலும், அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். இதையடுத்து, இளம்பெண் போலீசில் புகாரளித்ததைத் தொடர்ந்து, சம்பத் கைது செய்யப்பட்டார்.