தமிழக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

603பார்த்தது
தமிழக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தநிலையில் திடீர் உடல்நலக்குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பூரண நலத்துடன் உள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி