உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள். இதை தொடர்ந்து, 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்தாண்டு 447 மாணவர்கள் என இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.