தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம். இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனுமதிப்பதில்லை என புகார் எழுந்ததையடுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அவர் உதவியாளர் ஒருவருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உரிய இருக்கை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களிடம் நடத்துனர்கள் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.