பிறந்த உடனேயே தாயை இழந்த குழந்தைகள் மற்றும் ஆதரவில்லாமல் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதற்காக பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆதரவில்லாத குழந்தைகளுக்கும், ஆரோக்கியமின்றி பிறந்த குழந்தைகளுக்கும் நீங்கள் அன்பால் கொடுக்கும் பரிசு இது என கூறியுள்ள தமிழக அரசு, இதற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அல்லது தாய்ப்பால் வங்கியை அணுக வேண்டுகோள் விடுத்துள்ளது.