கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் தின பேரணி நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த உழவர் தின பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. இதில் இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி மத்திய அரசு ஏற்றுமதி செய்ய வலியுறுத்தினர்.