தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் முதலிடம் - மு.க.ஸ்டாலின் பேச்சு!

80பார்த்தது
தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் முதலிடம் - மு.க.ஸ்டாலின் பேச்சு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன. உயர்க்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்போது சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி