'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'யுனிவர்சிட்டி', 'எலி', 'பவானி’ மற்றும் விவேக் உடன் பல படங்களில் நடித்துள்ளவர் 'டெலிபோன்' சுப்பிரமணி (67). திரையுலகிற்குள் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் 'டெலிபோன்' சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (ஜூன். 10) காலமானார். அவர் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.