மலையாள சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாறா, எப்.ஐ.ஆர், அன்ன பூரணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து வெளியிட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் மாலா பார்வதி புகார் அளித்துள்ளார்.