சென்னையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாவட்டம் ஒன்றை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுதிக்கு படிக்க வந்துள்ளார். அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது. காவலாளி மேத்யூ பிற சிறுமிகளிடம் எப்படி நடந்துகொள்வார்? யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடக்கிறது.