ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்காவுக்கு உதவி செய்த பலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு பயண தடை விதித்துள்ளார். இதனால், ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப விரும்பும் மக்களுக்கு தலிபான்கள் பொது மன்னிப்பு வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளனர்.