நாட்டின் பல்வேறு நிறுவனங்களில் கொண்டுவரப்படும் புதிய கட்டுப்பாடுகளால் ஊழியர்கள் வேதனையடைந்து வருகின்றனர். அந்த வகையில், ஊழியர் ஒருவர் Reddit என்னும் தளத்தில், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் பிரேக் எடுத்ததற்கு, அந்நிறுவன CEO "வேலையை நீக்கி விடுவேன்" என மெயில் அனுப்பியதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மேலும், இந்நிறுவனத்தில் டீ, காபி கூட யாரும் கொடுப்பதில்லை எனவும் கூறியுள்ளார். அவரது பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.