கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தக் லைஃப்'. இப்படம், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், 6-வது நாளில் வெறும் ரூ. 1.75 கோடி மட்டுமே வசூலித்து, மொத்தமாக ரூ.40.95 கோடியை எட்டியுள்ளது. முதல் நாளில் 4,917 காட்சிகளில் வெளியான படம், 6-வது நாளில் 2,089 காட்சிகளாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.