கமலின் RKFI நிறுவனம் தயாரித்து வழங்கிய தக் ஃலைப் படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட அனுமதி கிடைக்கவில்லை என்றால், பெங்களூரைச் சேர்ந்த KVN Productions நிறுவனம் தயாரிக்கும் விஜயின் ஜனநாயகன் படத்தை தமிழகத்தில் ஓட அனுமதிக்கமாட்டோம் என தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்திலும் ஆதரவு குவிந்து வருகிறது. இதனால் விஜயின் படத்துக்கும் வெளியீட்டின் போது ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.