படம் பார்க்க திரையரங்கம் சென்றால் கண்டிப்பாக ஸ்வீட் கார்னை ருசிப்போம். அப்படிப்பட்ட ஸ்வீட்கார்ன் சுவையில் மட்டுமின்றி சத்துக்களிலும் சிறந்தது. இந்த ஸ்வீட் கார்ன்கள் சீசன் பாராமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும். அவற்றை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். இனிப்பு சோளத்தில் உள்ள பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் எலும்புகள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.