மதுரை திமுக பொதுக்குழுவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வீழ்த்த இயலாது. சூரியனைப்போல திமுகவும் நிரந்தரமானது. திமுகவின் ஆட்சியையும் நிரந்தரமானது என்பதை நாம் உருவாக்க வேண்டும். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரையிலும் எதிரி இல்லை என ஆணவத்துடன் கூறுபவன் நான் இல்லை. பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தபோது எதிர்க்கட்சி தலைவர் பவ்வியமாக இருந்தார். எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆழ முடியாது. திமுக ஆட்சிக்கு மக்களின் ஆதரவு அலை இருக்கிறது" என பேசினார்.